Posts

Image
  பென்லே கேஸில் மாளிகை, சித்ரா - அனிதா அறை.. என்னடி சித்து இப்படில்லாம் சொல்றே? புது இடம், பங்களாவும் ஒரு மாதிரி திகிலா இருக்கு. பத்தாததுக்கு அந்த காத்தையா சொன்ன கதை வேற! எல்லாம் சேர்ந்து உன்னைக் குழப்பியிருக்கு! உன் நல்ல மனசுக்கு ஒரு கெடுதலும் வராது. கவலைப்படாதே! - அணைத்துத் தேற்றினாள் அனிதா! தேன்க்ஸ் அனி! வீண் கவலையெல்லாம் விட்டு ரெம்ப நாள் ஆச்சுடி! இழக்க ஏதுமில்லாதவர்களை கவலை அணுகுவதில்லை! வளமா வாழறவங்க, இப்போ இருக்கறதைவிட அதிகமா ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கிப் போக ஆசைப்படறவங்களைத்தான் கவலைகள் வாட்டும். இருக்குறதுக்கு தீம்பு வந்துடுமோன்னு நடுங்குவாங்க. எனக்கு அதெல்லாம் இல்லை. ஒரு ஃபீலிங் தோணுச்சு. சொன்னேன். அவ்ளோதான்! உனக்கு என்னடி குறைச்சல்? ஏன் வெறுத்துப் போய் பேசறே? என்கிட்ட என்ன இருக்கு? உயிரையும் மானத்தையும் தவிர? உயிர் போறதைப்பத்தியோ, அவஸ்தைப்பட்டு சாகறதப்பத்தியோ நினைச்சு நான் கவலைப்படல. ஆனா மானத்துக்கு பங்கம் வராமப் போய்ச் சேர்ந்தா நல்லாருக்கும். மீனாட்சிகிட்ட நான் வேண்டறது அது ஒன்னுதான்! சரி சரி.. அந்தப் பேச்சை விடு. இந்தா! இதைப் போட்டுக்கோ! - தன் ட்ராவல் பேக்கில் இருந்து புத
Image
  சித்ரா' வதை - 9 பென்லே கேசில் பங்களா, கொளுக்கு மலை.. மேலாளர் காத்தையா, விருந்தினர்களாக வந்திருக்கும் மதுரை மாணவர்களோடு பேசிக்கொண்டு இருக்கிறான்.. ஃப்ரெண்ட்ஸ்! இங்க 10 நாளைக்குத் தங்கப் போறீங்க. இந்த கொளுக்கு மலை பத்தி கொஞ்சம் தெரிஞ்சுக்கறது பயனுள்ளதா இருக்கும். இது ஒரு மலை உச்சி ஊர். இதைத் தாண்டி எங்கும் போக வழியில்லே. திரும்ப கீழ இறங்கிதான் போகணும். இந்த ஊரின் மக்கள் தொகை ரொம்பக் கம்மி. அதனால எந்த பொருளும் அவ்ளோ சுலபமா இங்க கிடைக்காது. கீழ கொஞ்சதூரத்தில் சூரியநெல்லி'ன்னு ஒரு சின்ன ஊர் இருக்கு. அங்க சில கடைகள் இருக்கு. தேனியில் இருந்து ஒரு நாளைக்கு ரெண்டு தடவை அந்த ஊருக்கு பஸ் வந்துட்டுப் போகும். சாவியைக் கொடுத்தா ரூமுக்குப் போலாம். எதுக்கு மாப்ள இவன் நம்மள கூட்டி வச்சு பிரசங்கம் பண்றான்? அவந்தான் சொன்னானே! இங்க ஆளுக கம்மின்னு. புதுசா ஆளுகளைப் பார்த்ததும் வாயாரப் பேசறான் போல. கம்முன்னு இரு கணேசா. என்ன சொல்றான்னு கேப்போம்! அந்த பஸ் வர்ற நேரத்தை அனுசரிச்சு இங்கேருந்து ஒரு ஜீப் கிளம்பும். சின்னையாங்கறவன் ஓட்டறான். வெளியூர் போற ஆளுகளை சூரியநெல்லிக்கு அழச்சுட்டுப் போய் பஸ் ஏத்தி வ
Image
  சித்ரா' வதை - 8  மறுநாள் காலை.. டாக்டர் குடும்பத்தினரிடம் விடைபெற்று மாணவர் குழாம் கிளம்பிற்று. டியர் சில்ரன்! இது என் பிசினஸ் கார்ட்! உங்க கொளுக்கு மலை ட்ரிப்பை முடிச்சுட்டுக் கிளம்பறப்போ எனக்கு கால் பண்ணுங்க. நீங்க வர்ற நேரத்தைப் பொருத்து நல்ல லஞ்ச்சோ, டின்னரோ தயார் பண்ணி வைக்கிறோம். இப்போ வெறும் காஃபி மட்டும் சாப்பிட்டுப் போறீங்க. டிஃபன் சாப்ட்டுட்டு போங்கன்னா கேட்கல! சாரி அங்கிள்! நாங்க நேற்றே போயிருக்க வேண்டியது. அங்க பென்லே கேஸில் பொறுப்பாளர் காத்துட்டு இருப்பார். ஓக்கே கிட்ஸ்! அப்றம் இன்னொரு முக்கியமான விஷயம்! கொளுக்கு மலையில் எல்லா வசதியும் இருக்காது. எதுவும் எமர்ஜென்ஸின்னா எனக்கு தயங்காம தெரிவிங்க. அடுத்த ஒரு மணி நேரத்தில் அங்கே இருப்பேன். பெஸ்ட் ஆஃப் லக்! பை அங்கிள்! பை ஆன்ட்டி! சீரியோ கனி ப்ரோ! - கூத்தும் கும்மாளமுமாக மாணவர் குழு செல்வதை ஆழ்ந்த கவலையோடு சவுதாமினி பார்த்துக்கொண்டு இருந்தாள். ஏன் டியர் அப்செட்டா இருக்கே? அவங்க போற இடம் பத்தி உங்களுக்குத் தெரிஞ்சதை அவங்ககிட்ட சொல்லியிருக்கணும் டார்லிங். நீங்களும் சொல்லல. நான் அலர்ட் பண்ண முயற்சி செய்ததையும் தடுத்துட்டிங்க
  சித்ரா'  வதை   -  7  டேய் மாப்ள.. அது மினி இல்லடா.. முனி! - அடிவயிற்றில் இருந்து குரல் எடுத்துக் கத்தினான் கணேஷ்! காதில் வந்து ஏண்டா கத்தறே சனியனே! ஏற்கனவே எனக்கு பேதி புடுங்குது. நீ வேற பீதியைக் கிளப்பாதே! - கருணாஸ் நடுக்கத்துடனேயே சொன்னான். ஸ்ஸ்ஸ் சும்மா இருங்கடா! டாக்டர் சார்! ப்ளீஸ்..சொல்லுங்க.. நாங்க பார்த்தது உங்க மிசஸோட ஸ்தூல சரீரமா? நீங்க சொல்றது உண்மையா? - சிவா தணிவாக வினவினான். லுக் யங் மேன்! நான் இதுக்கு முந்தி உங்களை எல்லாம் பார்த்தது இல்லே! இனி எதிர்காலத்தில் சந்திப்பேனாங்கறதும் நிச்சயம் இல்லே! நான் எதுக்கு உங்ககிட்ட பொய் சொல்லணும்? அஃப்கோர்ஸ், இதுவரைக்கும் நான் மினியைப் பார்த்ததில்லே. ஆனா வீட்டு வேலைக்காரம்மா, செக்யுரிட்டி இவங்க கண்ணில் பட்டிருக்கா. அவ யாரையும் எதுவும் பண்ணதில்லே. இருந்தாலும் இப்போ யாரும் வேலைக்கு வர்றதில்லே! - கண்ணாடியைக் கழற்றித் துடைத்தவாறே சொன்னார் டாக்டர் ஷண்முக மணி! அய்யோ மாப்ள! அந்த அம்மாட்ட ஓவரா ஒரண்டை இழுத்து வச்சிருக்கேண்டா. வந்துச்சுன்னா என்னைத்தான் முதல்ல நாலு அப்பு அப்பும். என் சோலி முடிஞ்சுடும்டா மாப்பு. நல்லாருப்பே! என்னை எப்படியாவது
Image
  சித்ரா' வதை - 6 அது ஒரு ட்யுப்ளெக்ஸ் பங்களா. மேல் விதானம் உயரத்தில் இருந்தது. அதில்  தொங்கிய மிக பிரமாண்டமான இத்தாலி சரவிளக்கு அந்த ஹாலுக்கு மெருகு  ஊட்டியது . மாளிகையின் உள் அலங்கரிப்பும், தேக்கு மரத்தாலான இருக்கைகளும் செட்டிநாட்டு பாணியை நினைவூட்டின. ''எல்லாரும் சாப்பிட்டாச்சா? சங்கோஜப்படாமச் சொல்லுங்கோ. ஃப்ரிட்ஜ்ல மதியம் வச்ச மீன் குழம்பு இருக்கு. 10 நிமிஷத்தில் ஆவி பறக்க இட்லி தயார் பண்ணிடறேன்! - வீட்டுக்காரப் பெண்மணியின் வாஞ்சையும், ஒவ்வொரு சொல்லுக்கும் அவள் காட்டிய பரத அபிநயமும் மாணவர்களின் திகிலைக் குறைத்தன. அவள்பால் ஒரு ஆர்வத்தையும் உண்டாக்கின. தேன்க்ஸ் மேடம்! எல்லோரும் சாப்ட்டாச்சு. இப்போ நாங்க ஒரு டெலிபோன் பண்ணிக்கணும். எங்களுக்காக ஒருத்தர் காத்துட்டு இருப்பார். விஷயம் சொல்லணும். - சுரேஷ் சொன்னான்! டெலிபோன் பண்ணனுமா? ( வலது கையில் நடு விரல்களை மடக்கி, சுண்டு விரலையும் கட்டை விரலையும் பக்கவாட்டில் நீட்டி காதருகே கொண்டு போனாள்.) என் பெட்ரூமில் ( இரு கைகளையும் வணங்குவது போல் குவித்து அதில் தலை சாய்ப்பது போல் ஒரு அபிநயம்) இருக்கு. வாப்பா.. (இரு கை விரல்களையும் மடக்க
Image
  சித்ரா   '  வதை    -  5  மாணவர்கள் சென்ற வண்டியை வழிமறித்த காரிலிருந்து இறங்கி ஓடிவந்தான் ஜனா. கண்ணிமைக்கும் நேரத்தில் வேனுக்குள் பிரவேசித்தான். மற்ற எல்லோரும் இணையாக அமர்ந்திருந்தனர். சித்ரா மட்டும் அனிதாவோடு உட்கார்ந்திருந்தது கண்டு அவன் முகத்தில் திருப்தி நிலவியது. அடுத்து சிவா இருக்கும் இடத்தை நோக்கினான். ஜனாவைக் கண்டதும் சிவா தலையைக் குனிந்துகொண்டான். சுரேஷ் எழுந்து வந்து வினவினான்.. என்னாச்சு சார்? எங்க கம்பெனி வேலை விஷயமா மதுரைக்கு போயிட்டு இருந்தோம். வழியில் உங்க வண்டியைப் பார்த்தோம். அதான் நிறுத்தினேன். இதில்தான் நாங்க போறோம்ன்னு உங்களுக்கு எப்படித் தெரியும்? வேன் ஸ்டான்டில் விசாரிச்சேன். எல்லா விவரமும் உனக்கு சொல்லியே ஆகணுமா? - ஜனாவின் குரலில் சூடு ஏறியது. 'சுரேஷ்.. வீண் வாதம் வேண்டாமே!' என்பதாக சித்ரா கண்களால் கெஞ்சினாள். அதுக்கில்லே சார்! திடீர்ன்னு வந்து வழி மறிச்சதும் நாங்க பயந்துட்டோம்! - சித்ராவின் மௌன கோரிக்கையை சுரேஷ் ஏற்றுக்கொண்டான். தணிவாகவே பேசலானான். அதுவா? சித்ராவுக்கு செலவுக்குன்னு ஏதும் காசு கொடுக்காம விட்டுட்டேன். அதான் கொடுத்துட்டுப் போகலாம்ன்னு
Image
  எழுத்தாளரின் அலைபேசி எண் : 9842XXX6XX சித்ரா' வதை - 4 என்கிட்ட ஏதோ பேசணும்ன்னு வந்தியளாம்ல்ல.. பேசுங்க.. நான் பொழப்புக்குப் போகணும்.. - அனைத்து மாணவர்கள் மீதும் கண்களைச் சுழலவிட்டவாறு ஜனா கேட்டான்! அவனுக்கு பதிலளிக்க சிவா முற்பட்டபோது, அருகில் இருந்த சுரேஷ், 'வேண்டாம்.. நீ பேசாதே!'' என்பதாக கண்களால் எச்சரித்தான்! ஜனாவுக்கு பதிலளிக்க சிலருக்கு ஆர்வம் இருந்தது. இருந்தாலும் தான் சொல்வதை இந்த முரடன் எவ்வாறு புரிந்துகொள்வானோ? ஒருவேளை சித்ராவை அனுப்பமுடியாது என்று சொல்லிவிடுவானோ என்ற தயக்கம் அவர்கள் வாயைக் கட்டிப் போட்டிருந்தது. ஒருத்தரும் பேசமாட்டியளோ? சரி.. நான் கெளம்பறேன்! - போக்குக் காட்டினான் ஜனா. ஆர்த்தியின் காதலனான கணேஷ் இனியும் சும்மா இருப்பது சரியல்ல என்று முடிவெடுத்தான். அண்ணே! கொஞ்சம் பொறுங்க.. இதோ இவங்கதான் எங்க லீடர்! இவங்க வெவரஞ் சொல்லுவாக. ஆக்ச்சுவலா எங்களோட டூருக்கு ஒரு லேடி ப்ரொபசரும் வரதா இருந்துது. கடைசி நேரத்தில் அவங்களால வரமுடியல. அவங்க பொறுப்பை இந்த ஆர்த்திக்கிட்டதான் கொடுத்திருக்காங்க. இப்போ இவங்களே உங்களுக்குச் சொல்லுவாங்க! - என்று ஆர்த்தியைக் கை காட