பென்லே கேஸில் மாளிகை, சித்ரா - அனிதா அறை..

என்னடி சித்து இப்படில்லாம் சொல்றே? புது இடம், பங்களாவும் ஒரு மாதிரி திகிலா இருக்கு. பத்தாததுக்கு அந்த காத்தையா சொன்ன கதை வேற! எல்லாம் சேர்ந்து உன்னைக் குழப்பியிருக்கு! உன் நல்ல மனசுக்கு ஒரு கெடுதலும் வராது. கவலைப்படாதே! - அணைத்துத் தேற்றினாள் அனிதா!

தேன்க்ஸ் அனி! வீண் கவலையெல்லாம் விட்டு ரெம்ப நாள் ஆச்சுடி! இழக்க ஏதுமில்லாதவர்களை கவலை அணுகுவதில்லை! வளமா வாழறவங்க, இப்போ இருக்கறதைவிட அதிகமா ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கிப் போக ஆசைப்படறவங்களைத்தான் கவலைகள் வாட்டும். இருக்குறதுக்கு தீம்பு வந்துடுமோன்னு நடுங்குவாங்க. எனக்கு அதெல்லாம் இல்லை. ஒரு ஃபீலிங் தோணுச்சு. சொன்னேன். அவ்ளோதான்!

உனக்கு என்னடி குறைச்சல்? ஏன் வெறுத்துப் போய் பேசறே?

என்கிட்ட என்ன இருக்கு? உயிரையும் மானத்தையும் தவிர? உயிர் போறதைப்பத்தியோ, அவஸ்தைப்பட்டு சாகறதப்பத்தியோ நினைச்சு நான் கவலைப்படல. ஆனா மானத்துக்கு பங்கம் வராமப் போய்ச் சேர்ந்தா நல்லாருக்கும். மீனாட்சிகிட்ட நான் வேண்டறது அது ஒன்னுதான்!

சரி சரி.. அந்தப் பேச்சை விடு. இந்தா! இதைப் போட்டுக்கோ! - தன் ட்ராவல் பேக்கில் இருந்து புத்தம் புதிய டெனிம் ஜீன்ஸ், அதே துணியில் ஸ்லீவ்லெஸ் டாப்ஸ் செட்டை எடுத்துத் தந்தாள் அனிதா!

என்னடி இது? பேண்ட்டா? அதெல்லாம் வேண்டாம் அனி. போட்டுப் பழக்கம் இல்லே!

நாங்கள்லாம் என்ன ஜீன்ஸ் போட்டுக்கிட்டா பொறந்தோம்? எல்லாம் போடப் போடப் பழகிடும் சித்து. இன்னிக்கு நீ இதைத்தான் போட்டுக்கறே! என்கிட்ட இருக்கறதிலயே இதுதான் டீசண்ட் ட்ரஸ். நான் ஷார்ட்ஸ் போட்டுட்டுதான் வரப் போறேன்.

இல்ல.. டாப்ஸ் வேற கை இல்லாம இருக்கு. அதான் யோசிக்கிறேன்! - சித்து தயங்கினாள்.

ஓ! உன் அன்டர் ஆர்ம்ஸ் கை பார்க்கணும்ல்ல.. சரி சரி வா.. என் எப்பிலேட்டர் வாஷ் ரூம்லதான் இருக்கு. ரெண்டு இழுப்பு இழுத்து விடறேன். அஞ்சு நிமிஷத்தில் ரெடி ஆயிடலாம்!

அதெல்லாம் வேண்டாம் அனி!

ஓ! ரெடி பண்ணிக்கிட்டுதான் வந்திருக்கியா?

ஆமாம்! பொறந்ததில் இருந்தே 'ரெடி டு வியர் ஸ்லீவ்லெஸ்!' மாடல்தான் நான்! ஆனா கை இல்லாத ட்ரஸ் போட தயக்கமா இருக்கு. ரொம்ப ஓவராப் போறோமோன்னு மனசு நடுங்குது!

என்னாது? ரெடி டு வேர் எனிதிங்கா? கையைத் தூக்கு.. பார்ப்போம்! - சித்ரா தயங்கி நிற்க, அனிதாவே வலுக்கட்டாயமாக அவள் கைகளை உயர்த்திப் பார்த்து அசந்து போனாள். '' ஏய்! இது என்னடி அதிசயம்? இப்படியும் பொண்ணுக இருக்காங்களா? பேபி சாஃப்ட்டா வச்சிருக்கியேடி! இன்னும் என்னென்ன அதிசயம் இருக்கு உன்கிட்ட? இங்க மட்டும்தான் அப்படியா? இல்ல எல்லா எடமும் மொழுக்கட்டின்னுதான் இருக்குமா?''

போடி ரௌடி! என்னென்ன பேசறா பாரு! சரி.. உள்ளுக்கு போட்டுக்கறதை எல்லாம் ஊற வச்சிருக்கேன். இப்போ என்னடி செய்றது?

இந்தா! இதைப் போட்டுக்கோ! - அட்டை பிரிக்காத புது பேண்டீஸை எடுத்து நீட்டினாள் அனிதா. ''மேல போட்டுக்க புதுசா எதுவும் இல்லியேடி! பரவால்ல பரவால்ல.. இன்னும் பதினைந்து வருஷத்துக்கு உனக்கு ப்ரேசியர் தேவைப்படாது போலருக்கு. கிண்ணுன்னுதான் இருக்கு! ஃப்ரீயா வுடு! - குறும்புடன் அனிதா சொல்ல சித்ரா வெட்கித் தலை குனிந்தாள்.

''ஆர்ம் பிட்ஸ் பாக்கறேன்னு, எல்லாத்தையும் பார்த்துத் தொலைச்சிருக்கு குரங்கு!'' - திட்டியவாறே புது உடைகளை எடுத்துக்கொண்டு பாத்ரூமுக்குள் நுழைந்தாள் சித்ரா, அறைக் கதவுத் தாழ்ப்பாளை ஒருமுறை நோட்டம் விட்டுவிட்டு, கட்டியிருந்த துவாலையை நழுவவிட்டாள் அனிதா. ஷார்ட்ஸ், டீ ஷர்ட்டுக்குள் அடைக்கலமாகி, தன்னை அலங்கரித்துக்கொள்ளத் துவங்கினாள்.

பாத்ரூமில் இருந்து தயக்கத்துடன் வெளியே வந்த சித்ராவைப் பார்த்து அயர்ந்து போனாள் அனிதா. ''வாவ்! யு லுக் ஸோ கார்ஜஸ் சித்து! உன் கால்கள் இவ்ளோ நீளமா? லவ்லி! இவ்ளோ நாளா எல்லா அழகையும் புடவைக்குள் சுத்தி மறைச்சு வச்சிருந்திருக்கே! எதுக்குடி கையை அங்க வச்சு மறைச்சுக்கறே? எடு கைய!''

இல்லடி! எனக்கு என்னவோ ஒன்னுமே போட்டுக்காம நிக்கற மாதிரி ஒரு உணர்வு!

தட்ஸ் கொயட் நார்மல்! புதுசா டைட் அவுட்-ஃபிட் போட்டுக்கறவங்க எல்லாருக்குமே இப்படித் தோணும். போக போக பழகிடும். செம த்ரில்லாவும் இருக்கும்.

இதுல என்னடி த்ரில் இருக்கு? எனக்கு என்னமோ இந்த இடம் ஹை லைட்டா தெரியுதோன்னு ஒரு பயம் வருது!

அதெல்லாம் உன் பிரமை. அது பாவம் இருக்குற எடம் தெரியாம இருக்கு! ராதிகா ஜீன்ஸ் போட்டு பாத்திருக்கியா? இடுப்புக்குக் கீழ ஆம்பளை மாதிரி இருப்பா! நீ பச்சப்புள்ள மாதிரி இருக்கே! இந்த ட்ரஸ் உனக்குன்னு எடுத்த மாதிரி இருக்கு சித்து. அவ்ளோ கச்சிதம்!

போய் லஞ்ச் சாப்ட்டுட்டு வரப்போறோம். இன்னிக்கு வேற எந்த ப்ரக்ராமும் இல்லே. அதுக்கு இவ்ளோ காஸ்ட்லி ட்ரஸ் தேவையா அனி?. ப்ரைஸ் டாக் பார்த்தேன். 2499 ரூபான்னு போட்டிருக்கு!

உன் பேக் காணாம போனப்போ அந்த ராதிகா என்னல்லாம் பேசினா? நீ போடற ட்ரஸ்ஸைப் பார்த்து அவ வயிறு எரியணும். ஒவ்வொரு   நாளும் புதுசுபுதுசா    போட்டுக்கப்   போறே . ஹையோ!   இவ்ளோ அழகா இருக்கே. இன்னிக்கு நிச்சயம் அந்த வாயாடி   பழுத்துப் போகப்போறா!

சாதாரணமாவே ராதிகா என்னை வார்த்தையால் வறுத்து எடுப்பா. இன்னும் அதிகமா அவ வாயில் நான் சிக்கப் போறேன். அதுக்குதான் நீ வழி பண்ணியிருக்கேன்னு தோணுது அனி!

அவ கிடக்கறா விடு! இனிமே எதும் பேசினா, ஆர்த்தி கை பேசும். ராதிகா மேல   கொலை காண்டுல இருக்கா. அய்யோ! நீ எப்டி இருக்கே தெரியுமா? அப்டியே உன்னைக் கடிச்சுத் தின்னணும் போல இருக்கு. சும்மாவா சிவா உன்னை சுத்தி சுத்தி வரான்?

அவங்களுக்கு வேற ஆள் கிடைக்கல! நீங்க எல்லாம் ஏற்கனவே கமிட் ஆயிட்டிங்க. வேற வழியில்லாம என்னை பார்க்கறாங்க!

யாரு சிவாவா? எங்களை விட்டா காலேஜ்ல வேற பொண்ணுங்களே இல்லியா என்ன? இப்போ அவன் ஊம்ன்னு ஒரு வார்த்தை சொல்லட்டும்! எத்தனை பேரு ரெடியா இருக்காளுக தெரியுமா? அவ்ளோ ஏன்? நான்கூட சுரேஷை விட்டுட்டு சிவாவைப் பிடிச்சுப்பேன். பாத்துக்க! - புன்னகையுடன் சொன்னாள் அனிதா!

இதோ போய் சுரேஷ்கிட்ட சொல்றேன்! அவ்ளோ துளுத்துப் போச்சா உனக்கு? - சித்ராவும் குறும்பு காட்டினாள்.

அய்யோ பர தேவதே! சும்மாச் சொன்னேன்டி! நீ ஏழரையக் கூட்டாதே! 5 நிமிஷம் பொறு! ஹேர் டூ முடிச்சுட்டு வரேன். அங்கேருந்து கையை எடுடி! என்னத்தை மறைக்கப் பார்க்கறே? எல்லாம் பதனமாதான் இருக்கு. நீயே இங்க பாருங்கடான்னு காட்டிக் கொடுப்பே போல இருக்கே!

கொஞ்சம் அன்சேஃபா இருக்கு அனி! ஸாரி!

உனக்கு இனிமே இதப்போல ட்ரஸ் தான் கிடைக்கும். எல்லாரும் ஒவ்வொரு ஜீன்ஸ் எடுத்துட்டு வந்திருக்காளுக. பழக்கப்படுத்திக்கோ!

______________________________

ட்ரைவர் கிட்டா - போண்டாவுக்கு ஒதுக்கப்பட்ட அறை..

எங்கடா போயிருந்தே? கொஞ்ச நேரமா தேடினேன்..

சும்மா ஒரு ரவுண்டு போனேன் அண்ணே! ஊரு குளுகுளுன்னு இருக்கு. எங்க பார்த்தாலும் பச்சையா கண்ணுக்கு அழகா இருக்கு. ஆயுசுப்பூரா இங்கயே இருந்துடலாம் போல ஆசை வருது!

அதிகபட்சம் ஒரு வாரம் இருக்கலாம். அதுக்கு அப்புறம் வெறுத்துப் போயிடும் போண்டா! சுள்ளுன்னு வெய்யில்ல காய்ஞ்சா நல்லாருக்குமேன்னு மனசு ஏங்க ஆரம்பிச்சுடும். நீயே அப்படி சொல்லுவே பாரேன்!

இங்க உள்ள ஆளுகல்லாம் ஒரு மாதிரியா இருக்காங்கண்ணே! பொம்பள ஆளுக ரவுக்கை போடாம சுத்துறாக!

ஓ! அதான் இந்த ஊர்லயே இருந்துடலாம்ன்னு சொல்றியா? - சிரித்தவாறே சொன்னான் கிட்டா!

என்னண்ணே நீ வேற! இந்த பங்களா பின்பக்கத்தில் ரெண்டு பொம்பள ஆளுக சமைக்கிறாக! அவுகளச் சொன்னேன்.

அங்கேயும் போயிட்டு வந்துட்டியா? என்னா நடக்குது அங்கே?

எவ்ளோ சுறுசுறுப்பா வேலை பாக்குறாக தெரியுமா அண்ணே? நாமல்லாம் டவுனு சாமியாம்! நாம சமக்கிறது டவுனு சாமிகளுக்குப் புடிக்குமோ என்னமோன்னு பேசிக்கிட்டாக! நல்லா வாசனையாதான் சமைக்கிறாக! கருப்பு அண்ணன்கூட அங்க கூட மாட ஒத்தாசை பண்ணிட்டு இருக்காரு. என்னைப் பார்த்ததும் ஒரு எலையில் கோழிக்கறி வச்சு கொடுத்தாரு. நல்லாருக்கா சாப்ட்டுப் பார்த்து சொல்லுன்னு கேட்டாரு! இங்க உள்ளவுக எல்லாம் நல்லவுக போலருக்குண்ணே!

அதனாலதானே செல பேரு ஆடாத ஆட்டமெல்லாம் ஆடுறானுக! - கிட்டாவின் முகம் இறுகியது!

என்னண்ணே சொல்றே?

ஒன்னுமில்ல! மழை வர்றாப்பல இருக்கு! வண்டி கண்ணாடி எல்லாம் இழுத்துவுட்டுட்டு வா! ட்ரிப் ஷீட் எழுதிட்டியா?

எழுதிட்டேண்ணே! இதோப் போய் வண்டியை லாக் பண்ணிட்டு வாரேன். ஏண்ணே! 10 நாள் வண்டி நிறுத்திக் கிடக்கப் போகுதே! பேட்டரி ஒயரைக் கழட்டி விட்ரவா?

வேணாம் போண்டா! தினசரி இஞ்சின ஸ்டார்ட் பண்ணி 5 நிமிஷம் ஓட விடணும். ஒயர் இருக்கட்டும். ட்ரிப் ஷீட்ல கிலோ மீட்டர் ரீடிங் எழுதிடு. டீசல் மீட்டர் எவ்ளோ காட்டுது பாத்துட்டு வா!

சரிண்ணே!

______________________________

சாப்பாட்டு வேளையில் மாணவர் குழாம் மீண்டும் சந்தித்துக் கொண்டனர். சித்ராவின் உடையழகை எல்லோரும் பாராட்டினர். தூரத்தில் இருந்து சிவா ஏக்கத்துடன் தன் மனம் கவர்ந்தவளைத் திருட்டுத்தனமாக பார்த்து ரசித்தான். மற்ற மாணவர்கள் இயல்பாக அவளுடன் பழகுவது போலக்கூட தன்னால் இயலாமல் போனதை எண்ணி வருந்தினான்.

தேன் குடித்த நரி போல ஒருவன் இருந்தான். சரத் தான் அது! என்ன வழிமுறையைப் பின்பற்றியாவது இந்த சித்ராவை ருசித்துப் பார்த்துவிட வேண்டும் என்ற தணியாத ஆசை தணலாக அவனுக்குள் மூண்டது. அவன் அடிக்கடி சித்ராவை வெறிப்பதைப் பார்த்து ராதிகாவும் தனக்குள் பிழம்பாக கனன்று கொண்டிருந்தாள். வாய்ப்பு மட்டும் கிடைத்தால் சித்ராவை கை வேறு கால் வேறாக பிய்த்துப் போட்டிருப்பாள்.

'' இன்னிக்கு பூரா ஓய்வு எடுத்துக்கோங்க ப்ரெண்ட்ஸ்! நாளைக்கு உங்களை தடாகம் அருவிக்கு கருப்பு அழச்சுட்டுப் போவான். ப்ரேக் ஃபாஸ்ட் முடிச்சுட்டு ட்ரெக்கிங் மாதிரி அருவி இருக்கற இடத்துக்கு நடந்தே போகலாம். 200 அடிக்கு மேலேருந்து அருவி கொட்டும் அழகை பார்த்துட்டே இருக்கலாம். தடாகத்தில் குளிக்கலாம்.  நான் ஆட்டோல லஞ்ச் எடுத்துட்டு வரேன். அங்கேயே சாப்பாடு முடிச்சுட்டு கொஞ்சம் ஓய்வு எடுக்கலாம்! சாயந்தரமா ரிட்டர்ன் ஆகலாம்!'' - பங்களா மேனேஜர் அடுத்த நாளுக்கான நிகழ்ச்சி நிரலை அறிவித்தான்.

சாப்பாடு வெகு அருமையாக இருந்தது. விடுமுறையைக் கழிக்க நல்ல இடத்துக்குதான் வந்திருக்கிறோம் என்று மாணவர்களுக்குள் ஒரு மன நிறைவு எழுந்தது. மறுநாள் நடக்க இருக்கும் சோகத்தை அவர்கள் அறிந்திருக்கவில்லை பாவம்! சில மாணவர்கள், உதவியாளன் கருப்பையாவை தனியே தள்ளிக்கொண்டு போயினர்!

கருப்ஸ் மாம்ஸ்! அந்த மாடியில் என்ன இருக்கு? ஏன் போகக்கூடாதுன்னு உங்க ஆள் சொல்றார்?

எனக்கும் அப்படித்தான் சொல்லி வச்சிருக்கார்! ஒருநாள் அவர் இங்க இல்லாதப்போ போய் எட்டிப் பார்த்தேன். உள்ள செவத்துல பூரா வெவகாரமான ஓவியம் வரைஞ்சு வச்சிருக்கு! மாடி கொஞ்சம் கச்சடாவா சுத்தம் இல்லாம கிடக்கு. விளக்கு வெளிச்சமும் இல்ல. ஜன்னல் எல்லாம் பலகை வச்சு ஆணி அடிச்சு அடைச்சு வச்சிருக்கு. பயந்துகிட்டு திரும்பிட்டேன்!

நாங்களும் அங்க போய்ப் பார்க்கணுமே கருப்ஸ்! பெயிண்ட்டிங்லாம் இருக்குன்னு வேற சொல்றே!

ரெண்டு நாளில் மேனேஜர் டவுனுக்குப் போவார். அப்போ போவோம். உங்க தெம்புல நானும் நல்லா சுத்தியடிச்சுப் பார்த்துப்புடுறேன். காத்தண்ணாவுக்குத் தெரிய வேணாம். ரகசியமா இருக்கட்டும்! - கருப்பு உறுதி மொழிந்தான்.

டன் மாப்ஸ்! என் செல்லம்! இந்தா! இதை வச்சுக்க!

______________________________

இரவு..

ஜெனரேட்டர் அணைக்கப்பட்டு எங்கும் இருள். அவசரத்துக்கு ஒவ்வொரு அறையிலும் சார்ஜர் லைட் வைத்திருந்தனர். கம்பளிக்குள் நன்கு தூங்கிக்கொண்டிருந்த சித்ரா, தற்செயலாகக் கண் விழித்தாள். பக்கத்தில் அனிதா மருண்டுபோய் அமர்ந்திருந்தாள். வெளியில் வெட்டும் மின்னல் ஒளியில் தோழியின் முகம் தெரிந்தது. அந்தக் குளிர் நேரத்திலும் அனிதா முகத்தில் முத்து முத்தாக வியர்வை பூத்திருந்தது.

ஏய்? என்னடி ஆச்சு? தூங்கல?

அங்க பாருடி! - ஜன்னலுக்கு வெளியே பார்க்கச் சொல்லி கை காட்டினாள் அனிதா. சித்ராவுக்கு ஏதும் புரியவில்லை. எமர்ஜென்ஸி விளக்கை உயிர்ப்பித்தாள்.

என்ன அனி சொல்றே?

வெளில பாரு!

சித்ரா எழுந்து ஜன்னல் அருகில் போனாள். இலேசாக விலகியிருந்த ஜன்னல் திரையை விலக்கி வெளியே பார்த்தாள். எங்கும் இருள். ஒரு நீண்ட மின்னல் வெட்டிய போது..

தூரத்தில் இருந்த பிரமாண்டமான மரத்தின் கீழ் ஒரு வெள்ளை உருவம், தெளிவில்லாமல் மசமசவென்று தென்பட்டது. சித்ராவின் இதயம் ஒரு விநாடி நின்று பின் இயங்கிற்று!

கதாசிரியர்  தொடர்பு  எண் ; 9842XXX6XX

Comments

Popular posts from this blog